Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும்… வருகிற 27-ஆம் தேதிமுதல்… எதுவுமே ஓடாது… அதிர்ச்சி…!!!

தமிழகத்தில் வரும் 27ஆம் தேதி முதல் அனைத்து லாரிகளும் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்யப்போவதாக மாநிலத் தலைவர் எம். குமாரசாமி தெரிவித்துள்ளார்.

அரசு அனைத்து லாரிகளும் வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்த வேண்டும் என்று கூறியுள்ளது.தமிழகத்தில் 49 அரசு அனுமதி பெற்ற நிறுவனங்கள் உள்ளது. ஆனால் 12 நிறுவனங்களில்  மட்டுமே இக்கருவி வாங்க அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து மதுரை உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். வழக்கின் முடிவில் தீர்ப்பானது இக்கருவி மத்திய அரசு அனுமதி அளித்த எந்த நிறுவனங்களில் வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளலாம் என தீர்ப்பளித்தது.

இதே போல் ஒளிரும் பட்டைகளை ஒட்ட வேண்டும்.நாங்கள் ஏற்கனவே ஒட்டிக் கொண்டிருக்கும் எனவும், சம்மேளன மாநில தலைவர் எம்.குமாரசாமி தெரிவித்தார். ஆனால் அரசு ஒளிரும் பட்டைகளை 2 நிறுவனங்களிடம்  மட்டுமே வாங்க அனுமதித்துள்ளது. ரூபாய் 600 க்கு கிடைக்கும் ஒளிரும் பட்டைகள் அந்த நிறுவனங்களில் வாங்கும்பொழுது 5000ரூபாய்  செலவாகிறது. இதேபோல் 540 ஜி.பி.எஸ் கருவி கம்பெனிகள் உள்ளது. ஆனால் அதில் 8 கம்பெனிகளிடம் மட்டுமேபொருட்கள் வாங்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் 3 ஆயிரம் விலைக்கு கிடைக்கும் பொருள் 15ஆயிரம்  விலை கூறுகின்றனர்.

நாடு முழுவதும்  ஒரே விதைகளை விதிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். போக்குவரத்து துறையில் மிகவும் ஊழல் நடப்பதாகவும் சமீபத்தில் ஆர்.டி.ஓ சோதனைச் சாவடியில் சோதனை செய்த லஞ்ச ஒழிப்புத்துறையினர் இருக்கும் நன்றி தெரிவித்தார் .வெளிமாநிலங்களின் எல்லைகளில் உள்ள சோதனைச் சாவடிகள் அகற்றப்பட்டுள்ளது. ஆனால் இன்னும் தமிழகத்தில் அங்கே வசூலை அள்ளிக் கொண்டிருக்கிறது. பெட்ரோல் பங்கில் நிற்கும் லாரிகளுக்கு கூட அபராதம் விதிக்கின்றனர்.

இதை காவல் துறையினர்கள் சரி செய்ய வேண்டும் எனவும், டீசல் விலை போகப்போக அதிகரித்துக் கொண்டிருக்கிறது எனவும், இதனைத் தடுக்க வேண்டும் என்றும் கூறினார். இந்தக் கோரிக்கைகளை எல்லாம் வலியுறுத்தி வரும் 27ம் தேதி தமிழகம் முழுவதும் காலவரையற்ற லாரிகள் வேலைநிறுத்தம் நடைபெறும். தமிழ்நாட்டில் உள்ள 4 லட்சத்து 50 ஆயிரம் லாரிகள் இந்த வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்கின்றனர். இதற்கு ஆதரவாக அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் மற்றும் தென் இந்திய மோட்டார் காங்கிரஸ் உள்ளது.அன்றைய தினம் வெளியூர் லாரிகளும் உள்ளே வராது, இங்கிருந்தும் எந்த லாரியும் செல்லாது.

டெம்போ போன்ற சிறிய வாகனங்களும் இந்த வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்வதாக அதன் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். இதற்குமுன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் மாநில செயலாளர் வாங்கிளி, பொருளாளர் தன்ராஜ், கோவை மாவட்ட லாரி உரிமையாளர் தலைவர் முருகேசன், அதன் செயலாளர் வெங்கடேசன், பொருளாளர் செல்வராஜ் போன்ற பலர் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

Categories

Tech |