Categories
அரசியல் சற்றுமுன்

ஓரிரு நாட்களில் விடுதலை….! ”சுதாகரனின் மனு ஏற்பு”… வெளியான பரபரப்பு தகவல் ..!!

மறைந்த முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்கள் ஆட்சி காலத்தில் முறைகேடாக சொத்து குவித்த வழக்கில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு, ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்டோர் குற்றவாளிகள் என சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஜெயலலிதா உயிரிழந்ததால் அவர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட நிலையில் தற்போது ஏனையோர் சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இவர்களின் தண்டனை காலம் முடிய ஓரிரு நாட்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. இதனிடையே தற்போது முக்கியமான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள சுதாகரன் ஓரிரு நாட்களில் விடுதலை விடுதலை ஆகிறார் எனவும், முன்கூட்டியே விடுதலை செய்ய கோரிய சுதாகரனின் கோரிக்கை மனுவை பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் ஏற்றுள்ளது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |