பிக்பாஸில் இந்த வாரம் நடைபெற்ற டாஸ்கில் சிறப்பாக விளையாடிய போட்டியாளரை ஹவுஸ் மேட்ஸ் தேர்வு செய்கின்றனர்.
பிக்பாஸ் 4 நிகழ்ச்சி 70 நாட்களை கடந்து மிக விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த வார லக்சரி பட்ஜெட் டாஸ்க்காக போட்டியாளர்களுக்கு கோழிப்பண்ணை டாஸ்க் கொடுக்கப்பட்டது. இந்த விளையாட்டை போட்டியாளர்கள் மிக அதிரடியாக விளையாடி வந்தனர் . நேற்று இந்த டாஸ்க் நிறைவடைந்தது .
#Day74 #Promo1 of #BiggBossTamil #பிக்பாஸ் – தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/Spu4O9MzKy
— Vijay Television (@vijaytelevision) December 17, 2020
இந்நிலையில் இன்றைய எபிசோடுக்கான முதல் புரோமோ வெளியாகியுள்ளது . அதில் நடந்து முடிந்த டாஸ்கில் சிறப்பாக செயல்பட்ட போட்டியாளரை தேர்ந்தெடுக்கின்றனர் ஹவுஸ் மேட்ஸ். முதலாவதாக வந்த அனிதா அர்ச்சனாவின் பெயரை கூறுகிறார். மேலும் அனைவரையும் ஆச்சரியமூட்டும் படி சிறந்த போட்டியாளராக ஆரி மற்றும் ரியோ இருவரும் பாலாவை தேர்ந்தெடுத்துள்ளனர் . வழக்கமான லக்சரி பட்ஜட் டாஸ்க்குகளில் சொதப்பும் பாலா தற்போது சிறந்த போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.