ஓரிரு நாட்களில் விடுதலையாகிறார் சுதாகரன் விடுதலை ஆக இருக்கின்றார் என தகவல் வெளியாகியுள்ளது.
சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள சுதாகரன் ஓரிரு நாட்களில் விடுதலையாகிறார். முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரிய சுதாகரின் கோரிக்கை மனுவை பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது. ஏற்கனவே 92 நாள் சிறைவாசம் அனுபவித்ததால் பிப்ரவரி 14ஆம் தேதிக்கு முன் விடுவிக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
92 நாட்களை 79 நாட்களாக குறைத்த நீதிமன்ற காலம் கடந்ததால் சுதாகரனை உடனே விடுவிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சுதாகரன் செலுத்திய 10 கோடி அபராத்தை நீதிமன்றம் இன்னும் ஏற்காமல் இருக்கிறது. அபராதத்தை நீதிமன்றம் ஏற்றுவிட்டால் இன்னும் ஓரிரு நாட்களில் சுதாகரன் விடுதலையாக வாய்ப்பு இருக்கின்றது. எனவே அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.