டிக் டாக் செயலுக்கு இணையான புது ஆப்பை களமிறக்க பேஸ்புக் நிறுவனம் ஆர்வம் காட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் ஏராளமானவர்கள் பயன்படுத்தி வந்த டிக் டாக் செயலி பயன்பாட்டிற்கு இந்திய அரசு தடை விதித்தது. ஏற்கனவே இந்த செயலின் மீது பல்வேறு விமர்சனங்கள் இருந்த நிலையில் இந்தியாவிற்கு சீனாவுடனான எல்லைப் பிரச்சினைக்கு பிறகு டிக் டாக் செயலியை தடை செய்ய இந்தியா முடிவுக்கு வந்தது. டிக் டாக் சீனா உருவாக்கிய செயலி என்பதால் நாட்டின் பாதுகாப்பு கருதி தடை செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது.
இந்நிலையில் டிக் டாக் செயலுக்கு இணையான கொலாப்(collab) என்ற செயலியை பேஸ்புக் நிறுவனம் தீவிரமாக வடிவமைத்து வருகிறது. ஆனால் டிக் டாக் செயலியின் இடத்தை எந்த ஒரு செயலியும் இதுவரை நிரப்பவில்லை. பல செயலிகள் இருந்தாலும் கூட டிக் டாக் மீது மக்களுக்கு இருந்த மோகம் புதிதாக வரும் செயலிகள் மீது யாருக்கும் அதிக மோகம் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.
எனவே இந்த இடத்தில் டிக் டாக் இணையான ஒரு செயலியை இறக்க பேஸ்புக் நிறுவனம் அதிகமாக தீவிரம் காட்டி வருகிறது. பேஸ்புக் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் என்ற வசதியை அறிமுகப்படுத்தியது. ஆனால் அது எதிர்பார்த்த அளவுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கவில்லை. அதனால் டிக் டாக் போன்று கொலாப் என்ற செயலியை களமிறக்க பேஸ்புக் தீவிரமாக இறங்கி உள்ளது. மேலும் இந்த செயலி விரைவில் அனைவருக்கும் பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.