Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

இது தமிழ்நாடு தானே ? ஏன் இப்படி பண்ணுறீங்க ? அரசுக்கு ஐகோர்ட் கெடு….!!

தமிழகத்தில் அரசாணைகள், சுற்றறிக்கை கடிதங்கள் அனைத்தையும் தமிழில் தயாரித்து வெளியிட கோரி தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு மார்ச் 29ம் தேதிக்குள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

சென்னை குறுக்கு பேட்டையில் சேர்ந்த பழனி என்பவர் தொடர்ந்த வழக்கில், தமிழகத்தில் முதல் மொழியாக தமிழிலும், இரண்டாவது மொழியாக ஆங்கிலமும் என இரட்டை மொழிக் கொள்கை பின்பற்றபடுகின்றது. இதில் தொன்மையான தமிழ்மொழி அரசு அதிகாரிகளால் பல இடங்களில் புறக்கணிக்கப்படுகிறது. அரசின் உத்தரவுகள், அரசாணைகள், சுற்றறிக்கை கடிதங்கள் ஆகியன ஆங்கிலத்திலேயே தயாரிக்கப்பட்ட சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பப்படுவதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

சட்ட மன்றத்தை பொருத்த வரைக்கும் நிதிநிலை அறிக்கை தமிழில் தயாரிக்கப்பட்டு உறுப்பினர்களுக்கு வழங்கக் கூடிய நிலையில் அதே நடைமுறையை அரசாணைகள், சுற்றறிக்கைகள், கடிதங்களை தயாரிக்கும்போது பின்பற்றுவதில் எந்த ஒரு சிக்கலும் இல்லை. அதே போல தமிழக டிஜிபி சமீபத்தில் பிறப்பித்த உத்தரவில் காவல்துறை அதிகாரிகள் கடிதங்களை தமிழில் அனுப்ப வேண்டும். கையெழுத்தை தமிழில் இடம்பெற வேண்டும் என்று தெரிவித்துள்ளதையும் தனது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பான கோரிக்கையுடன் தமிழக அரசுக்கு பலமுறை மனு அனுப்பியும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால் தன்னுடைய மனுவை பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று அந்த மனுவில் கோரிக்கை வைத்திருக்கிறார். இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன் – பொங்கியப்பன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் இந்த மனு தொடர்பாக மார்ச் 29ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்று தமிழக தலைமைச் செயலாளருக்கும், தமிழ் வளர்ச்சித் துறை செயலாளருக்கும் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை மார்ச் 29 தள்ளி வைத்திருக்கிறார்கள்.

Categories

Tech |