Categories
அரசியல் மாநில செய்திகள்

‘ரகசியமாக சந்திக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை’… கமல் ஆவேசம்…!!!

தமிழகத்தில் கூட்டணி பற்றி யாரையும் ரகசியமாக சந்திக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை என்று கமல்ஹாசன் ஆவேசமாக கூறியுள்ளார்.

தமிழகத்தில் இன்னும் ஐந்து மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்ற எதிர்பார்ப்பு இழந்த நிலையில், அவர் அரசியலுக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அனைத்து கட்சிகளுக்கும் தேர்தல் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. இந்நிலையில் அனைத்து கட்சிகளும் ஒருவருக்கொருவர் விமர்சித்து தீவிரமாக தேர்தல் பிரசாரத்தில் களமிறங்கியுள்ளனர்.

இந்நிலையில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதியை கமல்ஹாசன் ரகசியமாக சந்தித்து கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியதாக இன்று காலை பரபரப்பு தகவல் வெளியாகியது. ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்த கமல்ஹாசன் கூறுகையில், “திமுகவோடு கூட்டணி குறித்து உதயநிதியுடன் ரகசிய சந்திப்பு நடத்தியதாக வெளிவந்த தகவல் ஊடகங்களின் யூகம் தான். யாரையும் ரகசியமாக சந்திக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை” என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |