நடிகர் ஆர்யா மற்றும் நடிகர் விஷால் இணைந்து நடிக்கும் ‘எனிமி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகர்களாக வலம் வரும் நடிகர் விஷால் மற்றும் நடிகர் ஆர்யா இருவரும் இணைந்து நடிக்கும் திரைப்படம் ‘எனிமி ‘. இயக்குனர் ஆனந்த் ஷங்கர் இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது . நிஜ வாழ்க்கையில் நண்பர்களாக இருக்கும் விஷால் மற்றும் ஆர்யா இந்தப் படத்தில் எதிரிகளாக நடித்துள்ளனர் . இந்த படத்தில் கதாநாயகியாக மிருணாளினி நடித்துள்ளார்.
மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல நடிகர் பிரகாஷ்ராஜ் நடித்துள்ளார். இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். இந்நிலையில் எனிமி படத்தின் அசத்தலான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. நீளமான துப்பாக்கியை கையில் வைத்திருக்கும் விஷாலின் இந்த மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது . இதையடுத்து அடுத்த வருடம் கோடை விடுமுறையில் இந்த படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.