போராட்டங்கள் யாரையும் பாதிக்க கூடாது என விவசாயிகளின் போராட்டம் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்திருக்கிறது.
டெல்லி விவசாயிகள் போராட்டம் தொடர்பாக இன்று இரண்டு வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருகிறது. ஒன்று டெல்லியில் போராட்டம் நடத்தக் கூடிய விவசாயிகளை அந்த சாலைகளில் இருந்து அகற்ற வேண்டும் என்று கோரி தொடரப்பட்ட ஒரு வழக்கு விசாரிக்கப்படுகிறது. மற்றொன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக திமுக உள்ளிட்ட கட்சிகள் மற்றும் பொதுநல அமைப்புகள், விவசாய சங்கங்கள் தொடர்ந்த வழக்கும் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அமர்வு முன்பாக விசாரிக்கப்பட்டது.
இந்த வழக்கு தொடர்ந்த மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த போராட்டம் என்பது டெல்லியை கடுமையாக பாதித்திருக்கிறது. குறிப்பாக விலைவாசி ஏற்றம் ஏற்படுவதற்கான அபாயம் இருக்கிறது. அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதற்கு தட்டுப்பாடுகள் ஏற்படுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. எனவே ஒட்டுமொத்த டெல்லியும் பாதிப்பு கொள்வதற்கான வாய்ப்பு இருப்பதாகவு குற்றம் சாட்டினார்.
அப்போது கருத்து தெரிவித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, எந்த ஒரு குறிப் இந்த சட்டத்திற்கு எதிராக அல்லது அரசின் நடவடிக்கைக்கு எதிராக இந்திய மக்கள் யார் வேண்டுமானாலும் போராட்டம் நடத்தலாம். இந்திய அரசியல் சாசனம் அதற்கான உரிமையை வழங்கி இருக்கிறது. ஆனால் அத்தகைய போராட்டங்கள் மற்றொருவருடைய தனிநபர் வாழ்க்கையை பாதிப்பதாக இருந்துவிடக்கூடாது. அப்படியான போராட்டங்கள் ஒரு பெரிய பிரச்சினையாக பார்க்கப்படும் என்ற விஷயத்தை அவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.
மேலும் இன்றைய வழக்கின் விசாரணையின்போது விவசாயிகளின் போராட்டம் தொடர்பான விவரங்கள் மட்டும் தான் நாங்க விசாரிக்க போகிறோம். முக்கியமான முடிவு என்பது அறிவிக்கப்படும் என்ற ஒரு விஷயத்தையும் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளார்கள். இந்த சட்டங்களுக்கு எதிரான வழக்கை நாங்கள் தற்போது விசாரிக்கப் போவதில்லை. அதை பொறுமையாக விசாரிப்போம் என்று சொல்லியிருக்கிறார்கள்.
எனவே இன்றைய தினம் இந்த வழக்கு விசாரணையையின் போது விவசாயிகள் போராட்டம் தொடர்பாக முக்கியமான உத்தரவுகள் வருவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. குறிப்பாக குழுக்கள் ஏதேனும் அமைத்து விவசாயிகளுடன் பேச்சுவார்த்தையை தொடங்குவதற்கான விஷயங்களை அவர்கள் மேற்கொள்ளலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.