பெங்களூருவில் பெண் போலீஸ் அதிகாரி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூரு சிஐடி பிரிவில் டிஎஸ்பியாக பணியாற்றுபவர் லட்சுமி. கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்வில் வெற்றி பெற்று 2017 ஆம் ஆண்டு பெங்களூரு நகரத்தில் சிஐடி பிரிவில் டிஎஸ்பியாக பணியாற்றி வந்தார். பெங்களூரு நகரில் அன்னபூர்ணேஸ்வரி நகரில் உள்ள உறவினர் வீட்டிற்கு நேற்று இரவு வந்து தங்கியுள்ளார். இரவு உணவிற்காக அவர்கள் அழைத்து இருந்ததால், அங்கு சென்றிருந்தார். பின்னர் ஓய்வு எடுப்பதாக கூறி விட்டு அறைக்கு சென்றுள்ளார்.
சிறிது நேரம் கழித்து உறவினர்கள் நண்பர்கள் சந்தேகம் அடைந்து கதவை உடைத்து பார்த்தபோது லட்சுமி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் லட்சுமி தற்கொலை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். நேர்மையான அதிகாரியான லட்சுமி பணிச்சுமை காரணமாக தற்கொலை செய்தாரா? அல்லது வேறு காரணமா? என்று விசாரித்து வருகின்றனர்.