கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோவிலில் கலைநயமிக்க கல்வெட்டு தூண்கள் திருடுப்பியுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் தூண்கள் காணாமல் போயுள்ளன. 7ம் நூற்றாண்டில் இந்த கோவில் கட்டப்பட்டதாக வரலாறு சொல்கிறது. அப்பேர்ப்பட்ட பழமையான கோவிலில் 1992 காலத்திலிருந்து 1995 வரை காலகட்டத்தில் இங்கு இருக்கக்கூடிய கல்தூண்கள் எடுத்துச் செல்லப்பட்டு உள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் இங்கு இருக்கக்கூடியவர்கள் கோவிலில் இருக்கக்கூடிய எந்த தூணை எடுத்தாலும் அது கீழே விழுந்துவிடும் அதை எடுப்பதற்கு வாய்ப்பில்லை என்று சொல்கிறார்கள்.
இந்த கோவிலில் கலைநயமிக்க 222 தூண்கள் உள்ள நிலையில் இரண்டு தூண்கள் காணாமல் போய் உள்ளன. இது தொடர்பாக சிலை தடுப்பு பிரிவு கூடுதல் இயக்குனர் அபய் குமார் சிங் விசாரணை நடத்தி வருகிறார். இது தொடர்பாக மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகின்றன. திருடப்பட்ட தூண்களை சென்னைக்கு எடுத்துச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.