Categories
தேசிய செய்திகள்

“இன்னும் கொஞ்சம் சரக்கு கொடு”… மறுத்த மணமகன்… நண்பர்கள் மாப்பிள்ளைக்கு கொடுத்த திருமண பரிசு..!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் திருமணத்திற்கு முன்பு விருந்தில் மதுபானம் அதிகமாக கொடுக்க மறுத்ததால் மகனை கத்தியால் குத்திய நண்பர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருமணத்திற்கு முன்பு பேச்சிலர் பார்ட்டி என்ற பெயரில் நண்பர்களுக்கு மதுவிருந்து தரப்படுகிறது. அந்த வகையில் உத்தர பிரதேச மாநிலத்தில் ஒரு கிராமத்தில் திங்கட்கிழமை இரவு 28 வயதான பப்லு என்ற நண்பர் தனது திருமணத்திற்கு பின் நண்பர்களை சந்திப்பதற்காக சென்றுள்ளார். அப்பொழுது அவரது நண்பர்கள் கூடுதலாக மது ஊற்ற வேண்டும் என்று கேட்டுள்ளனர். ஆனால் பப்லு தர மறுத்ததால் ஆத்திரமடைந்த நண்பர்கள் அவரை கத்தியால் குத்தியுள்ளார்.

ரத்தவெள்ளத்தில் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். குற்றம் சாட்டப்பட்டவர்களின் முக்கிய குற்றவாளியாக ராம்கிலாடி என்பவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக 5 பேரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணம் நடந்த சில மணி நேரத்தில் மணமகன் அவரது நண்பர்களால் குத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

Categories

Tech |