தஞ்சாவூரில் காதலிக்க மறுப்பு தெரிவித்ததால் ஓடும் பேருந்தில் கல்லூரி மாணவியை கழுத்தறுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அடுத்த நடுக்காவேரி அரசமரத்து தெருவை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரின் மகள் ஆஷா. இவர் தஞ்சாவூரில் தனியார் கலைக் கல்லூரியில் பிஎஸ்சி இறுதி ஆண்டு படித்து வருகிறார். இவரும், அதே ஊரை சேர்ந்த ராஜேந்திரன் மகன் அஜித் என்பவரும் ஒரே ஊர் ஒரே தெரு என்பதால் பழகி வந்துள்ளனர். அஜித் எலக்ட்ரீசியன் வேலையும், கார் மெக்கானிக் வேலையும் பார்த்து வருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அஜீத் அடிக்கடி குடித்துவிட்டு வேலைக்கு எதுவும் செல்லாமல் இருந்ததால் ஆஷா அவரை கண்டித்துள்ளார். பின்னர் தன்னோடு பழக வேண்டாம் என கூறியுள்ளார். சில நாட்கள் பேசாமல் இருந்துள்ளார். இதனால் நேற்று காலை ஊரிலிருந்து ஆஷா கல்லூரிக்கு அரசு பேருந்தில் தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்திற்கு வந்தார். அவரோடு அஜித்தும் வந்துள்ளார். பின்னர் ஆஷா பழைய பேருந்தில் இருந்து கல்லூரிக்கு செல்ல புது பேருந்து இருக்கு செல்லும் பஸ்ஸில் ஏறி அமர்ந்துள்ளார்.
அஜித்தும் அதே பஸ்ஸில் ஏறி ஆசாவுக்கு பின் அமர்ந்துள்ளார். தன்னை காதலிக்கும்படி, திருமணம் செய்து கொள்ளும்படியும் வற்புறுத்தியுள்ளார். இதற்கு ஆசா மறுப்பு தெரிவித்துள்ளார். தன்னிடம் பேச வேண்டாம் என்றும் கூறியுள்ளார். ஆத்திரமடைந்த அஜித் தனக்கு கிடைக்காத நீ யாருக்கும் கிடைக்கக் கூடாது எனக்கூறி கையில் வைத்திருந்த பேனா கத்தியால் ஆஷாவின் கழுத்தை அறுத்துவிட்டு பேருந்திலிருந்து கீழே குதிக்க முயற்சி செய்தார்.
அப்போது ராமநாதபுரம் என்ற இடத்தில் பேருந்து மெதுவாகச் சென்றதால் குதித்து தப்பி ஓட முயன்ற போது பேருந்தில் இருந்தவர்கள் சத்தம்போட்டு அஜித்தை பிடித்து, தெற்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பேருந்தில் ரத்தம் சொட்ட சொட்ட வெளியே வந்த ஆசா உடனடியாக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதுகுறித்து ஆஷா கொடுத்த புகாரின் பேரில் அஜித்தை போலீசார் கைது செய்துள்ளனர்.