Categories
உலக செய்திகள்

“நயா பைசா செலவில்லாமல் கைலாசா” 3 நாட்கள் மட்டுமே…. நித்யானந்தா அறிவிப்பு…!!

விருப்பமுள்ளவர்கள் கைலாசா நாட்டிற்கு ஒரு பைசா கூட செலவில்லாமல் வரலாம் என்று நிதித்யானந்தா அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

பல்வேறு பாலியல் புகாரில் சிக்கி தலைமறைவாகி இருப்பவர் சாமியார் நித்யானந்தா. இவர்  கைலாசம் என்ற நாட்டை உருவாக்கி அதில் தான் வசிப்பதாக பரபரப்பை ஏற்படுத்தினார். இது குறித்து அவ்வப்போது வீடியோ மூலம் பல்வேறு தகவல்களை வெளியிட்டு வருகிறார். மேலும் கைலாசா நாட்டிற்கு என்று தனியாக கரன்சிகள், தங்க நாணயங்கள் மற்றும் தனி ரிசர்வ் பேங்க் உள்ளதாக அதிரடி அறிவிப்பையும் நித்யானந்தா வெளியிட்டார்.

எனவே கைலாசா தொடர்பாக பலரும் பல விதமான வதந்திகளை பரப்ப தொடங்கினர். இந்நிலையில் நித்யானந்தா தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், கைலாசா நாட்டிற்கு வர விருப்பம் உள்ளவர்களை விமானம் மூலமாக இலவசமாக அழைத்துச் செல்ல உள்ளதாகவும், இதற்காக மூன்று நாட்கள் கொண்ட விசா விண்ணப்பித்து ஆஸ்திரேலிய வரவேண்டும் என்று கூறியுள்ளார்.

மேலும் கைலாசா வர விரும்புகிறவர்கள் கைலாசா மின்னஞ்சலில் விண்ணப்பம் செய்யலாம் என்று கூறியிருக்கிறார். 3 நாட்களுக்கு மேல் விசா கிடையாது என்றும், ஆஸ்திரேலியா வரை வந்து விட்டால் அங்கிருந்து கைலாசவிற்கு இலவசமாகவிமானத்தில் அழைத்து செல்லப்படுவார்கள் என்றும் கூறியுள்ளார்.  மீண்டும் ஆஸ்திரேலியா திரும்பும் வரை உணவு, தங்குமிட வசதிகளுக்கும், போக்குவரத்து வசதிகளுக்கும் உண்டாகும் செலவை கைலாசா நிர்வாகமே ஏற்கும் என்று நித்யானந்தா கூறியுள்ளார்.

Categories

Tech |