Categories
அரசியல் மாநில செய்திகள்

“இலவச மின்சாரம்” கட்டாயம் தொடரும்… முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு..!!

தமிழகத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரத் திட்டம் தொடரும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற கொரோனா தடுப்பு ஆய்வு கூட்டம் மற்றும் புதிய திட்ட பணிகள் தொடக்க விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தடுப்பு ஊசி இன்னும் இந்தியாவிற்கு வரவில்லை. வந்தவுடன் தமிழகத்திலுள்ள அனைத்து மக்களுக்கும் இலவசமாக வழங்கப்படும் என அறிவித்தார்.

தமிழகத்தில் அடுத்த தேர்தல் ஏப்ரல் அல்லது மே மாதம் வருகிறது. இதனால் சில அரசியல் கட்சிகள் திட்டமிட்டு பொய்யான பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே பலமுறை கூறியதுபோல விவசாயிகள் பாதிக்கப்படக்கூடிய எந்த ஒரு திட்டத்தையும் நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்தை அரசு வழங்கும் என உறுதி அளித்தார்.

Categories

Tech |