Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

“செல்போன் பாக்காத…” கண்டித்த தந்தை… மனமுடைந்த பிளஸ் ஒன் மாணவியின் விபரீத முடிவு..!!

தந்தை கண்டித்ததால் மனமுடைந்த +1 மாணவி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புளியங்குடியில் உள்ள நீர்பாய்ச்சிமாடன் கோவில் தெருவைச் சேர்ந்த தம்பதியினர் புலவேந்திரன்- ராதா. புலவேந்திரன் அப்பகுதியில் பெட்டிக் கடை ஒன்று நடத்தி வருகிறார். இவர்களுடைய மகள் 15 வயதுடைய செல்வி. இவர்  அங்குள்ள பள்ளியில்  பதினொன்றாம் வகுப்பு படித்து வந்தார் . செல்வி ஆன்லைன் மூலமாக கல்வி பயில்வதற்காக அவரது தந்தை புதிய செல்போனை வாங்கிக் கொடுத்துள்ளார். சம்பவத்தன்று இரவில் செல்வி ஆன்லைன் வகுப்பு முடிந்த பிறகும் நீண்ட நேரம் செல்போனை பயன்படுத்தி கொண்டிருந்தார் .

இதனைப் பார்த்த அவரது தந்தை செல்வியை கண்டித்துள்ளார். இதனால் மனவேதனை அடைந்த செல்வி நேற்று முன்தினம் காலை திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று செல்வியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |