Categories
தேசிய செய்திகள்

ஜனவரி 1 முதல் பள்ளிகள் திறப்பு… அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

கேரளாவில் ஜனவரி 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அம்மாநில அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் அனைத்து மாநிலங்களிலும் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பல்வேறு மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து கேரளாவில் ஜனவரி 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் தொடங்கப்படும் என்று அம்மாநில அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கேரளாவில் 10 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அடுத்தாண்டு மார்ச் 17ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை பொதுத் தேர்வு நடைபெறும் என்றும், கல்லூரிகளில் இளநிலை படிப்பு களுக்கு ஜனவரி முதல் வாரத்தில் 50 சதவீத மாணவர்களுடன் வகுப்புகள் தொடங்கும் எனவும் அறிவித்துள்ளது. மற்ற மாநிலங்களில் பள்ளி திறப்பு குறித்து அறிவிப்பு வெளியாகும் நிலையில், தமிழகத்தில் பள்ளி திறப்பது பற்றி எந்த ஒரு முடிவும் தற்போது வரை எடுக்கப்படவில்லை.

Categories

Tech |