தமிழக வீரர் நடராஜன் அடுத்த ஆண்டு உலகக்கோப்பையில் இடம்பெற வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக வீரர் நடராஜனுக்கு இந்திய அணியில் இருக்கும் நான்கு முக்கிய பவீரர்கள் தங்களுடைய ஆதரவை தெரிவித்து வருவதால் அவர் அடுத்த வருடம் நடைபெறவுள்ள உலக கோப்பையில் இடம் பெறுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது என்று கூறப்பட்டு வருகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டி மற்றும் டி20 தொடரில் இந்திய அணியில் விளையாடிய தமிழகத்தை சேர்ந்த தங்கராசு நடராஜன் அற்புதமாக விளையாடி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். குறிப்பாக டி20 தொடர் வெல்வதற்கு நடராஜன் மற்றும் பும்ராவை முக்கியமாக கூறலாம்.
அந்த அளவிற்கு இவர் சிறப்பாக விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலிய மண்ணில் கலக்கிய நடராஜனுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துக்கள் வந்து கொண்டுதான் இருக்கிறது. இந்நிலையில் நடராஜனுக்கு இந்திய அணியில் நல்ல ஒரு ஆதரவு இருக்கிறதாம். முதலில் ஹர்திக் பாண்டியா தனக்கு வழங்கப்பட்ட தொடர் நாயகன் கோப்பையை நடராஜனிடம் கொடுத்து ஊக்குவித்தார். தற்போது இவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்கள் ஆகிவிட்டனர் அடுத்ததாக இந்திய அணியின் கேப்டன் கோலி நடராஜன் மீது மிகப்பெரிய நம்பிக்கை வைத்துள்ளார்.
இதனால் நடராஜன் வரும் காலத்தில் ஜாம்பவனாக உருவெடுப்பார் என்று கூறப்படுகிறது. அது மட்டுமல்லாமல் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வந்தால் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள உலக்கோப்பையில் ஒரு முக்கிய பந்துவீச்சாளராக இந்திய அணியில் இருப்பார் என்றும் அவர் வெளிப்படையாகவே கூறி இருக்கிறார். ஹார்திக் நடராஜனை தனக்கு நிகரான போட்டியாளராக நினைக்காமல் தூக்கி வைத்துக் கொண்டாடி வருகிறார். அது மட்டுமல்லாமல் தன்னுடைய அனுபவங்களையும் நடராஜனோடு பகிர்ந்து வருகிறார். மேலும் இந்திய அணியின் பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் நடராஜனின் பந்துவீச்சை மேலும் மேம்படுத்த உதவி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.