Categories
உலக செய்திகள்

நண்பரால் கடத்தப்பட்ட சிறுமி …பெற்றோர் பதற்றம் … மீட்ட போலீசார்…!!

 நண்பரால் கடத்தப்பட்ட சிறுமி 16 மணி நேர போராட்டத்திற்கு பின்பு மீட்கப்பட்டுள்ளார்.  

பிரிட்டனில் உள்ள bristol என்ற பகுதியில் உள்ள 8 வயது சிறுமி Tiolah.  இவரது வீட்டிற்கு நேற்று மதியம் Annmari lawton  மற்றும் Adam ஆகிய  இருவர் சிறுமியை பார்க்க வந்துள்ளனர். இருவரில் Annmari lawton  என்பவர் சிறுமியின் குடும்ப நண்பர் ஆவார். இந்நிலையில் இவர்கள் இருவரும் ஒரு மணி நேரத்தில் வருவதாக கூறி சிறுமியை வீட்டில் இருந்து அழைத்துச் சென்றுள்ளனர். அதன் பிறகு நீண்ட நேரமாகியும் Tiolah வீட்டிற்கு வரவில்லை. மேலும் Annmari வீட்டிற்கும் போகவில்லை என்பதால்   நேரம் செல்ல செல்ல பதற்றமடைந்த Tiolah வின் தாய் காவல்துறையினரிடம் புகார் கொடுத்துள்ளார். இந்நிலையில்  Annmari  ஏதோ ஒரு வீட்டில் இருந்து ஃபேஸ்புக்கில் நேரலை தொடங்கியுள்ளார்.

அதில் Annmari மற்றும் Adam ஆகியோருடன் Tiolah  இருந்துள்ளார். Annmari கூறுவதை டியாலோ செய்து கொண்டிருப்பது போல காட்சி ஒளிபரப்பப்பட்டுள்ளது. இச்சம்பவம் நாடு முழுக்க பரவ ஆரம்பித்த நிலையில் உள்துறை செயலாளர் ப்ரீத்தி பட்டேல் இது தனக்கு வருத்தம் அளிப்பதாகவும் இதுதொடர்பாக விஷயமறிந்தவர்கள் உடனடியாக தகவல் தெரிவிக்கவும்  என்றும் கேட்டுக்கொண்டார். இதனைத் தொடர்ந்து சுமார் 16 மணி நேரம் குழந்தையை தேடும் பணி  தீவிரமாக நடைபெற்று வந்துள்ளது.  அதன் பிறகு டியாலோ வை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். மேலும்  Annmari  மற்றும்Adam இவர்கள் இருவரையும் கைது செய்துள்ளனர். மேலும்  இவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

Categories

Tech |