பிக்பாஸிலிருந்து வெளியேறிய ரமேஷ் தன்னிடம் பிடித்த குணங்கள், மாற்றிக்கொள்ள வேண்டிய குணங்களை கூறுமாறு ரசிகர்களிடம் வீடியோ வெளியிட்டு கேட்டிருந்தார்.
நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் -4 நிகழ்ச்சி 70 நாட்களைக் கடந்து மிக விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கடந்த வாரம் மக்களின் குறைவான வாக்குகளைப் பெற்று டபுள் எவிக்ஷனில் ஜித்தன் ரமேஷ் , நிஷா ஆகிய இருவரும் வெளியேற்றப்பட்டனர். பிக்பாஸில் இருந்து வெளியேறிய நிஷா தனது சமூக வலைத்தள பக்கத்தில் ‘நான் யாரையும் காயப்படுத்த கூடாது என்று நினைத்தேன் ,ஆனால் இன்று நானே காயப்பட்டு இருக்கிறேன்’ என பதிவிட்டிருந்தார் .
இதையடுத்து ஜித்தன் ரமேசும் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஆதரவளித்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார் .மேலும் அதில் தன்னிடம் உள்ள பிடித்த குணங்கள் மற்றும் சிறிது மாற்றிக் கொள்ளவேண்டிய குணங்கள் குறித்து கமெண்ட்ஸ் செய்யுமாறு ரசிகர்களிடம் கேட்டிருந்தார். இந்நிலையில் தற்போது ஜித்தன் ரமேஷ் வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில் கருத்து தெரிவித்த ரசிகர்களுக்கு நன்றி . நீங்கள் தெரிவித்த கருத்துக்களில், ‘இன்னும் கொஞ்சம் பேச வேண்டும்’, ‘சேர்க்கை சரியில்லை’ போன்ற விஷயங்களை நான் மாற்றிக் கொள்கிறேன் எனக் கூறியுள்ளார்.