Categories
தேசிய செய்திகள்

இனி இளைஞர்கள் அரசு வேலை கனவு என்னவாகும்?… மத்திய அரசின் செக்…!!!

ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களை மத்திய அரசு மீண்டும் பணி‌யில் அமர்த்த உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

மத்தியில் பாஜக தலைமையிலான அரசு மத்திய அரசு பணிகளில் ஏராளமான மாற்றங்களைக் கொண்டு வர அரசு திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் அரசுப் பணிகளில் தற்காலிக அதிகாரிகள் அதாவது ஆலோசகர் இடங்களை உருவாக்கி நியமிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அரசு பணியில் ஒப்பந்த அடிப்படையில் ஆலோசகர்களாக தற்காலிக அதிகாரிகள் நியமிக்கப்பட்டு நிரந்திர அதிகாரிகளின் பணியிடங்களைக் குறைத்து அதன் மூலம் செலவினங்களைக் குறைக்க மத்திய அரசு திட்டமிட்டது. அதன்படி ரயில்வே துறை, மனிதவள மேம்பாட்டுத் துறைஉள்ளிட்ட முக்கிய துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு மட்டுமே இந்த வாய்ப்பு வழங்கப்படுகிறது. இதன்மூலம் நிரந்தர பணியிடத்தை படிப்படியாக குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் பணியமர்த்தப்பட்ட ஓய்வுபெற்ற மத்திய அரசு ஊழியர்கள் மாதந்தோறும் உறுதியளிக்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட தொகை ஊதியமாக வழங்கப்படும். இவ்வாறு பணியமர்த்தப்படும் ஊழியர்களுக்கு டி.ஏ எனப்படும் பஞ்சப்படி, எச்.ஆர்.ஏ மற்றும் வருடாந்திர சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட போன்ற அரசின் எந்தவொரு சலுகையும் கிடைக்காது. மேலும் முன்னறிவிப்பின்றி எப்போது வேண்டுமானாலும் நீக்கப்படும் அபாயமும் இருக்கிறது.. இருப்பினும், அவர்களுக்கு போக்குவரத்து கொடுப்பனவு கிடைக்கும். மாதம் 1.5 நாள் விடுப்பு அனுமதிக்கப்படும்.

இந்த வழிகாட்டுதல்கள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை ஒப்புதலுக்காக காத்திருப்பதாக தகவல்கல் தெரிவிக்கின்றன. ஆனால், இந்த நடைமுறை அமலுக்கு வந்தால், இளைஞர்கள் பெரிதும் பாதிக்கப்படுவர். அரசு வேலைகளில் எப்படியாவது அமர்ந்து விட வேண்டும் என்று பல ஆண்டுகளாக பயிற்சி பெற்று வருகின்றனர். அவர்களின் கனவை சிதைக்கும் வகையிலான அரசின் செயல்பாடு இருப்பதாக பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டுகின்றனர்.

Categories

Tech |