Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ஆக்ஷன் காட்சிகளில் மிரட்ட போகிறதா ராஜமௌலியின் அடுத்த படம் ? … ஸ்டன்ட் கலைஞர்களுக்கு 150 நாள் சிறப்பு பயிற்சி…!!!

‘பாகுபலி’ இயக்குனர் ராஜமவுலி இயக்கும் ‘ஆர் ஆர் ஆர்’ படத்துக்காக ஸ்டன்ட் கலைஞர்களுக்கு 150 நாள் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

‘பாகுபலி’ என்ற பிரம்மாண்ட படத்தின் மூலம் பிரபலமடைந்த இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் தற்போது தயாராகும் திரைப்படம் ‘ஆர் ஆர் ஆர்’. அதாவது ரத்தம் ரணம் ரௌத்திரம் . இந்தப்படம் சுதந்திர போராட்ட வீரர்களான அல்லூரி சீதாராம ராஜு, கொமரம் பீம் ஆகியோரின் வாழ்க்கை கதையை மையமாக வைத்து உருவாவதாக கூறப்படுகிறது . தமிழ் ,தெலுங்கு, ஹிந்தி உள்பட பல்வேறு மொழிகளில் இந்த படம் உருவாகி வருகிறது.

RRR, SS Rajamouli's next, starring Ram Charan, Jr NTR, Alia Bhatt, Ajay  Devgn, to now release on 8 January, 2021 - Entertainment News , Firstpost

இதில் கதாநாயகர்களாக தெலுங்கு நடிகர்கள் ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம் சரண் தேஜா ஆகியோர் நடிக்கின்றனர் . மேலும் இந்த படத்தில் நடிகை ஆலியா பட் , நடிகர் அஜய் தேவ்கன் ,சமுத்திரகனி, ஸ்ரேயா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்நிலையில் இந்த படத்தின் சண்டை காட்சிகளுக்காக ஸ்டண்ட் கலைஞர்களுக்கு 150 நாள் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது . பிரபல ஸ்டண்ட் இயக்குனர் சாலமன் ராஜு உருவாக்கும் இந்த சண்டை காட்சியை தனித்துவமாக அமைக்க இந்த பயிற்சி அளிக்கப்படுவதாக கூறப்படுகிறது . இதனால் இந்தப் படம் பாகுபலியை  விட ஆக்ஷன் காட்சிகளில் மிரட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது .

Categories

Tech |