Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுவையான முட்டை மக்ரோனி… செய்து பாருங்கள் …!!!

முட்டை மக்ரோனி செய்ய தேவையான பொருள்கள் :

மக்கரோனி                                            – 300 கிராம்
முட்டை                                                  –  3
தக்காளி                                                   – 1
மிளகாய் தூள்                                       –  2 தேக்கரண்டி
வெங்காயம்                                           – 2
உப்பு                                                           – தேவையான அளவு
வெங்காயத்தாள்                                  –  3
பச்சை மிளகாய்                                    – 3
கொத்தமல்லி                                       – தேவையான அளவு
மிளகு தூள்                                             –  3  தேக்கரண்டி
இஞ்சி                                                       – தேவையான அளவு
பூண்டு                                                     – 3 பல்
சோம்பு                                                    – 1 தேக்கரண்டி
பட்டை, இலவங்கம், ஏலக்காய் – 1
எண்ணெய்                                            – தேவையான அளவு

செய்முறை :

முதலில் வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு, வெங்காயத்தாள் ஆகியவற்றை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவேண்டும் .

அதன் பின் பச்சை மிளகாயை துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவேண்டும் .பின் ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி ஒரு தேக்கரண்டி மிளகு, சிறிது உப்பு சேர்த்து அடித்து வைக்கவேண்டும் .

பின்  வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் முட்டையை ஊற்றி நன்கு கிளறி விட்டு தனியாக கிண்ணத்தில் எடுத்து வைத்துக் கொள்ளவேண்டும் .

பின்பு  மக்ரோனியை ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி பதமாக வேக வைத்து இறக்கவேண்டும் . வெந்த பின் குளிர்ந்த நீர் விட்டு அலசி வைக்கவும்.

பிறகு  வானலியில் எண்ணெய் விட்டு பொடித்த ஏலக்காய், பட்டை, இலவங்கம், சோம்பு சேர்த்து பொரிய விடவேண்டும் . பொரிந்த பின் வெங்காயம், பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய், தக்காளி, வெங்காயதாள் சேர்த்து வதக்கவும்.

அடுத்து நன்கு வதங்கிய பின் தண்ணீர், மிளகாய் தூள், மிளகு தூள், உப்பு சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும்.

அடுத்தது நன்கு கொதித்து காய்கள் வெந்ததும் மக்ரோனி சேர்த்து கிளறவும். தண்ணீர் முற்றிலுமாக சுண்டியதும் முட்டை கலவை சேர்க்கவும். கொத்தமல்லி சேர்த்து பரிமாறவும். சுவையான முட்டை மக்ரோனி தயார்.

Categories

Tech |