தனுசு ராசி அன்பர்களே…! நண்பர்களிடம் கேட்ட உதவி பரிபூரணமாக கிடைக்கும்.
மகிழ்ச்சியான சில தருணங்களை அமைத்துக் கொள்வீர்கள். மன நிலையில் நல்ல மாற்றம் இருக்கும். தேவையான உதவிகளைச் செய்வீர்கள். தொழில் வியாபாரம் இருந்த சிக்கல் விலகி செல்லும். சேமிக்கும் விதத்தில் ஆதாயம் கிடைக்கும். பெண்களுக்கு நகை ஆபரணம் வாங்கும் யோகம் இருக்கும். தேவையில்லாத பிரச்சனை தலையிட வேண்டாம். யாருக்கும் கருத்துக்கள் எதுவும் சொல்ல வேண்டாம். அறிவுரை கூறாமல் இருந்தால் ரொம்ப நல்லது. மனோதிடம் வேக வகையில் இருக்கும்.வேண்டியவரை நீங்கள் பிரிய வேண்டி இருக்கும். நட்பால் நல்ல விஷயங்கள் நடந்தாலும் சில விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தனுசு ராசிக்காரர்கள் ரகசியங்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டாம்.
காதலில் உள்ளவர்கள் நிதானமான போக்கு அணுக வேண்டும். பாடகர் கண்மணிகளுக்கு செயலில் கவனம் வேண்டும். ஆசிரியர் சொல்வதை கூர்ந்து கவனியுங்கள்.முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது இளம் மஞ்சள் நிறத்தில் ஆடை அணிய வேண்டும் இளம் மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானம் கொடுத்து வாருங்கள் நல்லது நடக்கும். அப்படியே மாலை நேரத்தில் நெய் தீபமேற்றி வணங்கி வாருங்கள் நல்லது நடக்கும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வட மேற்கு. அதிர்ஷ்ட எண் ஒன்று மட்டும் 9. அதிர்ஷ்ட நிறம் வெள்ளை மட்டும் இளம் மஞ்சள் நிறம்.