Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“இலவசமாக ரயில்வே வேலை வாங்கி தரேன்” ஆசை வார்த்தை கூறி மோசடி… மனமுடைந்த இளைஞரின் விபரீத முடிவு..!!

ரயில்வே வேலைக்காக பணத்தை கொடுத்து ஏமாந்த தனியார் பள்ளி ஆசிரியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணி பகுதியை சேர்ந்த தம்பதியினர் சிவக்குமார்-நதியா. இவர்களுக்கு ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளது . சிவக்குமார் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை செய்து வந்தார்.இவரிடம் சில ஆண்டுகளுக்கு முன்பு அரக்கோணத்தை சேர்ந்த 45 வயதுடைய  புஷ்பராஜ் என்பவர் ரயில்வே துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூபாய்  நான்கு லட்சம் பெற்றுக்கொண்டுள்ளார்.

பின்பு  அவர்  ரயில்வே துறையில் வேலை நிச்சயமாக கிடைக்கும் நீ மேலும் 4 பேரை சேர்த்துவிட்டால் இலவசமாக வேலை கிடைக்கும் என்று சிவக்குமாரிடம் ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதை நம்பிய சிவக்குமார் மேலும் 4 பேரை  புஷ்பராஜுக்கு அறிமுகம் செய்து வைத்து அவர்களிடமிருந்து ரூபாய் 11 லட்சத்தையும் வாங்கி கொடுத்துள்ளார்.  பல நாட்கள் சென்ற பின்பும் சிவக்குமாருக்கு ரயில்வே துறையில் வேலை கிடைக்கவில்லை.

இதுகுறித்து அவர் புஷ்பராஜை  சந்தித்து வேலையை வாங்கிக் கொடுங்கள் இல்லை என்றால் கொடுத்த பணத்தை திருப்பி தாருங்கள்  என்று கூறியுள்ளார். ஆனால் புஷ்பராஜ் இதனை கண்டுகொள்ளாமல் இருந்துள்ளார். இந்நிலையில் கடனை திருப்பி கேட்டவர்களிடம் பதில் சொல்ல முடியாமல் சிவக்குமார்  திணறி உள்ளார்.இதனால் மனம் உடைந்து  காணப்பட்ட சிவகுமார் தான் தற்கொலை செய்து கொள்ள போவதாக செல்போனில் வீடியோ பதிவு செய்து நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் அனுப்பி வைத்து விட்டு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் . இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |