EPS அவர்களும் பிக்பாஸ் பார்க்கிறார் என்று நடிகர் கமல் எமோஜி போட்டு கலாய்த்துள்ள புகைப்படம் வெளியாகியுள்ளது.
நடிகர் கமல் எம்ஜிஆர் குறித்து கமல் பேசிவருவது அதிமுகவினரிடையே கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. எனவே “பிக்பாஸ் பார்த்தால் நன்றாக இருக்கும் குடும்பம் உருப்படாமல் போய்விடும்” அப்படி ஒரு நிகழ்ச்சியை நான்கு ஆண்டுகளாக தொகுத்து வழங்கிய அனைத்துக் குடும்பங்களையும் கமல் கெடுத்துள்ளார் என்று பழனிசாமி சாடியுள்ளார்.
மேலும் கமல் படங்களில் எம்ஜிஆர் படத்தை போல நல்ல கருத்துக்கள் இல்லை என்றும் சினிமா மூலமும் மக்களை கெடுக்கிறார் என்று இபிஎஸ் தெரிவித்துள்ளார். இதற்கு கமல் தனது ட்விட்டர் பக்கத்தில் “முதல்வரும் பிக்பாஸ் பார்க்கிறார் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது” என்று கிண்டலாகச் சிரித்த முகத்துடன் இருக்கும் எமோஜி போட்டு கலாய்த்துள்ளார்.