ஊரடங்கு அமல்படுத்தப்படுத்தினால் பல நிறுவனங்கள் அழிந்துவிடும் என்று தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஜெனீவாவில் கொரோனா ஊரடங்கு காரணமாக அடைக்கப்பட்ட பார்கள் மற்றும் உணவகங்கள் ,கடந்த 10ஆம் தேதியில் தான் திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இரவு 7 மணி வரை தான் கடைகள் திறக்கப்பட்டிருக்க வேண்டும் என்று அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது. இதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மக்களுக்கு பயம் இருக்கிறது. மேலும் அரசிற்கும் மக்களுக்கும் இடையில் சிறந்த ஒருங்கிணைவு வேண்டும் என்று Romandie என்டர்பிரைசஸ்ஸின் தலைவரான Blaise Maththey கூறியுள்ளார். மேலும் அவர் கேள்வி ஒன்றையும் எழுப்பியுள்ளார்.
அதாவது, “ஜெனிவாவில் உள்ள கடைகள் அடைக்கப்படும் என்றால் அதற்கு அருகில் இருக்கும் vaud என்ற மாவட்டத்தில் கடைகள் திறந்திருக்கும் போது அது எவ்வாறு சரியானதாக இருக்க முடியும்” என்றார். மேலும், இதற்கான இழப்பீட்டு தொகையும் அரசாங்கத்தால் வழங்கபட வேண்டும் என்றும் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து தொழிற்சங்க தலைவர் David d flippo கூறியுள்ளதாவது, “வணிக உரிமையாளர்கள் தொழிற்சங்க தலைவர்களுடன் உடன்பட்டு நடந்து கொள்கிறார்கள்” என்றார். மேலும் குறைவான வருமானம் வருபவர்களுக்கு ஊதியம் குறைக்கப்படுவது வருத்தமளிக்கிறது என்றார்.