மோடி அரசு தன்னுடைய பிடிவாதத்தை விட்டுவிட்டு வேளாண் சட்டங்களை திரும்ப பெறுமாறு ராகுல் காந்தி சாடியுள்ளார்.
டெல்லியில் மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் அவர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் விவசாயிகளின் இந்த போராட்டத்திற்கு மத்திய அரசு எந்த ஒரு முடிவையும் சொல்லவில்லை. மேலும் இந்த போராட்டத்தில் மூன்று விவசாயிகள் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து தற்போது சீக்கிய மதகுரு உயிர் தியாகம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், “விவசாயிகள் அவல நிலையில் உள்ளனர். உயிர்த் தியாகம் செய்துள்ளனர். மோடி அரசின் மிருகத்தனம் எல்லை தாண்டிவிட்டது இனியேனும் பிடிவாதத்தை விட்டு விட்டு வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுங்கள்” என்று ராகுல் காந்தி சாடியுள்ளார்.