Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது? – முதல்வர் அறிவிப்பு…!!

கொரோனா தொற்று குறையும்போது தான் பள்ளிகள் திறக்கப்படும் என்று முதல்வர் பழனிச்சாமி சற்றுமுன் அறிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. எனவே மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்படுகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் முதுநிலை பயிலும் மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் திறக்கப்பட்டு வகுப்புகள்  நடந்து வருகின்றன. ஆனால் பள்ளிகள் இன்னும் திறக்கப்படவில்லை. பள்ளிகள் திறப்பு குறித்து பல்வேறு செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில் கொரோனா தொற்று குறையும்போது பள்ளிகள் திறப்பது பற்றி முடிவு எடுக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி சற்றுமுன் அறிவித்துள்ளார். பெற்றோர்களின் கருத்தை அறிந்து தான் பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவித்தார். மேலும் ஜனவரி மாதம் பெற்றோர்களிடம் பள்ளி திறப்பு குறித்து கருத்து கேட்பு கூட்டம் நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |