எம்ஜிஆர் பெயரை பயன்படுத்த அதிமுகவினரை தவிர வேறு யாருக்கும் உரிமை இல்லை என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 2021 சட்டமன்ற தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்கள் உள்ள நிலையில் ஆளும் கட்சியினரும், எதிர்க்கட்சியினரும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி விமர்சித்து வருகின்றனர். மேலும் பிரபல நடிகர்களான ரஜினி மற்றும் கமல் ஆகியோரும் அரசியலில் இறங்கியுள்ளனர். இதையடுத்து நடிகர் பார்த்திபனும் அரசியல் களத்தில் இறங்கியுள்ளார். இதனால் வரும் சட்டமன்ற தேர்தல் எதிர்பார்ப்போடும் ,சுவாரசியமாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் எம்ஜிஆர் குறித்து கமல் பேசிவருவது அதிமுகவினரிடையே கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
எனவே “பிக்பாஸ் பார்த்தால் நன்றாக இருக்கும் குடும்பம் உருப்படாமல் போய்விடும்” அப்படி ஒரு நிகழ்ச்சியை நான்கு ஆண்டுகளாக தொகுத்து வழங்கிய அனைத்துக் குடும்பங்களையும் கமல் கெடுத்துள்ளார் என்று பழனிசாமி சாடியுள்ளார். மேலும் கமலுக்கு தனி செல்வாக்கு இல்லை என்பதால் எம்ஜிஆர் பெயரை பயன்படுத்துகிறார். எம்ஜிஆர் பெயரை சொன்னால் தான் ஓட்டு கிடைக்கும் என்று ஒப்புக் கொள்கிறார் என்று விமர்சனம் செய்துள்ளார். எம்ஜிஆர் பெயரை பயன்படுத்த அதிமுகவை தவிர மற்றவர்களுக்கு தார்மீக உரிமையில்லை என தெரிவித்துள்ளார்.