Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

அருமையான கருவாடு தொக்கு … செய்து பாருங்கள் …!!!

கருவாடு தொக்கு செய்ய தேவையான பொருள்கள் :

பீர்க்கங்காய்            –  1 கிலோ
கருவாடு                   –   3 துண்டுகள்
வெங்காயம்             –  4
தக்காளி                      –  4
மிளகாய் தூள்          –  2 தேக்கரண்டி
சீரகத்தூள்                  –  2 தேக்கரண்டி
மஞ்சள் தூள்             –  1  தேக்கரண்டி
உப்பு                              – தேவைக்கு
எண்ணெய்                 –   10 குழிக்கரண்டி
கடுகு                             – தேவைக்கு
உளுந்து                       – தேவைக்கு
சீரகம்                            – தேவைக்கு
கடலைபருப்பு          – தேவைக்கு
பூண்டு                           – 3 பல்
கறிவேப்பிலை         – ஒரு கொத்து
பச்சைமிளகாய்        – 2

செய்முறை :

முதலில் பீர்க்கங்காயை தோல் சீவி நீரில் சுத்தம் செய்து பின் நறுக்கிக் கொள்ளவும். கருவாடு துண்டுகளை அரை மணி நேரம் நீரில் ஊற வைத்து நன்கு சுத்தம் செய்து எடுத்து வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வதக்கவும்.

அதன் பின்  நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். பின் தக்காளியை சேர்த்து வதக்கவும். இந்த கலவைகளை ஓரமாக ஒதுக்கி விட்டு நடுவில் சேரும் எண்ணெய் மூலம் கருவாடு துண்டுகளை இருப்பக்கமும் பொரிக்கவும் அல்லது தனியாக எண்ணெயில் பொரித்தும் போடலாம்

பிறகு கருவாடு நன்கு பொரிந்ததும் கொத்தி விட்டு கிளறவும். அத்துடன் பீர்க்கங்காயை சேர்க்கவும். ஒரு சேர கிளறி 2 நிமிடம் வதக்கவும். பின்னர் தூள் வகைகளை சேர்த்து மூடியிட்டு வேக விடவும். நீர் விடவேண்டாம்.

அடுத்தது 10 நிமிடங்களில் அனைத்தும் குழைந்து இருக்கும். அப்போது தேவைக்கு மட்டும் உப்பு தூள் சேர்த்து கிளறவும். எண்ணெய் பிரியும் வரை வதக்கி பின்னர் இறக்கவும். பீர்க்கங்காய் கருவாடு தொக்கு தயார்.

Categories

Tech |