நடிகர் வைபவ் நடித்துள்ள ‘காட்டேரி’ படத்தின் டிரைலரை நடிகர் ஆர்யா வெளியிட்டுள்ளார் .
தமிழ் திரையுலகில் எதார்த்தமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் வைபவ் . தற்போது இவர் நடிப்பில் தயாராகியுள்ள திரில்லர் படம் ‘காட்டேரி’ . இந்தப் படத்தை இயக்குனர் டிகே இயக்கியுள்ளார். வித்தியாசமான திகில் படமாக தயாராகியுள்ள இந்த படத்தில் வரலட்சுமி சரத்குமார், கருணாகரன், சோனம் பாஜ்வா, ஆத்மிகா ஆகியோர் நடித்துள்ளனர் .
Happy to release the trailer of the spine-tingling #Katteri 👻👻 wishing the team huge success#KatteriTrailerhttps://t.co/fGZR6MxqOG #Deekay @actor_vaibhav @bajwasonam @im_aathmika @varusarath5 @Cinemainmygenes @prasad_sn_ @kegvraja @StudioGreen2 @thinkmusicindia @proyuvraaj
— Arya (@arya_offl) December 17, 2020
கடந்த ஏப்ரல் மாதம் 17ஆம் தேதி ரிலீசாக இருந்த இந்த படம் கொரோனா ஊரடங்கால் ஒத்திவைக்கப்பட்டது . இதையடுத்து கடந்த ஜூன் மாதம் இந்த படத்தின் முதல் பாடல் வெளியானது. இந்நிலையில் இந்த படத்தின் டிரைலரை நடிகர் ஆர்யா வெளியிட்டுள்ளார். அதில் ‘மர்மம் நிறைந்த ஊரில் வெளியூர் நபர்கள் மாட்டிக்கொண்டு அங்கிருந்து எப்படி தப்பிக்கிறார்கள் என்பதே கதையாக இருக்கும்’ என தெரிகிறது .