Categories
தேசிய செய்திகள்

பெங்களூரில் பெண் டி.எஸ்.பி. தூக்கிட்டு தற்கொலை …!!

பெங்களூரு நகரில் பெண் காவல் அதிகாரி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரு நகரில் சிஐடி பிரிவில் டிஎஸ்பியாக பணிபுரிந்து லட்சுமி என்ற பெண் நேற்று இரவு உணவுக்காக பெங்களூரு அன்னபூர்ணேஸ்வரி நகர் பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றுள்ளார். சிறிது நேரம் ஓய்வு எடுப்பதாக சொல்லி விட்டு சென்ற அவர்,  நீண்ட நேரமாக அறையை விட்டு வெளியே வராததால் உறவினர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள்,  உடனடியாக இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக சிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மிக நேர்மையான அதிகாரியாக அறியப்பட்ட லட்சுமியின் தற்கொலைக்கு பணி நெருக்கடி காரணமாக அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா ? என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |