அடுத்த ஆண்டு முதல் ஜே.இ.இ முதன்மை தேர்வு நான்கு முறை நடைபெறும் என மத்திய அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தெரிவித்துள்ளார்.
என்ஜினீயரிங் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான ஜே.இ.இ. முதன்மை தேர்வு அடுத்த ஆண்டு முதல் 4 முறை நடத்தப்படும் என மத்திய கல்வி துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தெரிவித்துள்ளார். முதற்கட்டமாக ஜே.இ.இ. முதன்மை தேர்வு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 23ஆம் தேதி முதல் 26ம் தேதி வரை நடைபெறும் என்றும், அதன் பின்னர் மார்ச்,ஏப்ரல், மே மாதங்களில் அடுத்தடுத்து நடைபெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். பிப்ரவரி மாதம் நடைபெறும் ஜே.இ.இ. முதன்மை தேர்வுக்கான முடிவுகள் கடைசித் தேர்வு முடிந்த அடுத்த ஐந்து நாட்களுக்குள் வெளியிடப்படும் என்றும் ரமேஷ் போக்ரியால் தெரிவித்துள்ளார்.