அமெரிக்காவின் கிழக்கு கடற்கரையில் வீசிய பனிப்புயல் காரணமாக வாஷிங்டன், நியூயார்க் உள்ளிட்ட மாகாணங்களில் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.
பனிப்புயல் காரணமாக வெர்ஜினியா மற்றும் வடக்கு கரோலினா உள்ளிட்ட பகுதிகளில் லேசான பனி பொழிவு இருக்கும் என கிழக்கு பென்சில்வேனியாவில் இருந்து காட்ஸ்கில் மலை வரை இரண்டு அடி உயரத்திற்கு பனி நிறைந்திருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாலைகளில் பனி நிறைந்திருப்பதால் பொதுமக்கள் வீடுகளுக்கு உள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. டைம்ஸ் சதுக்கத்தில் லேசான பனிப்பொழிவு இருக்கும் நிலையில், பொது மக்கள் அதனை ரசித்தவாறே வீதிகளில் நடந்து செல்கின்றனர். சாலைகளில் கொட்டிக்கிடக்கும் பனிக்கட்டிகளை ஒருவர் மீது ஒருவர் எரிந்தபடி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர்.