Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுவையான கொத்து புட்டு … செய்து பாருங்கள் …!!!

கொத்து புட்டு செய்ய தேவையான பொருள்கள் :

செ.வெங்காயம்          – 2
நறுக்கிய இஞ்சி          – சிறிது
அரிசி மாவு புட்டு       – 2 துண்டு
பச்சை மிளகாய்         – 3
குழம்பு கிரேவி            – 1 கப்
உப்பு                                  – சிறிது
எண்ணெய், கடுகு       – தேவையான அளவு
மிளகாய் வற்றல்       – 2
கறிவேப்பிலை            – 2 கொத்து

செய்முறை :

முதலில் வெங்காயத்தை நீளமாக நறுக்கிக் கொள்ளவும். அரிசி மாவு புட்டை நன்கு உதிர்த்துக் கொள்ளவும்.

அதன் பின் கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளித்து, பச்சை மிளகாய், இஞ்சி, வெங்காயம் மற்றும் உப்புச் சேர்த்து வதக்கவேண்டும்.

பிறகு உப்பு சிறிது சேர்த்தால் போதும் வெங்காயம் நன்கு வதங்கியவுடன் தீயைக் குறைத்து விட்டு உதிர்த்து வைத்துள்ள புட்டைச் சேர்த்துக் கலந்துவிடவேண்டும்.

அடுத்து  குழம்பு கிரேவியை சேர்க்கவும். அனைத்தும் ஒன்றாகச் சேரும்படி நன்கு கிளறிவிட்டு இறக்கவும்.  அருமையான கொத்து புட்டு தயார்.

Categories

Tech |