மருத்துவர்கள் ஆண்களின் மலட்டுத்தன்மைக்கு இது போன்ற உணவுகளே காரணம் என்று கூறுகின்றனர்.
தற்போதைய காலகட்டத்தில் ஆண்களுக்கு மலட்டு தன்மை என்பது ஒரு பெரிய பிரச்சினையாக இருக்கிறது. இதனால் குடும்பத்தில் பல்வேறு பிரச்சினைகள், மன விரக்தி, கணவன் மனைவி சண்டை உள்ளிட்ட பல பிரச்சினைகள் ஏற்படுகின்றன. ஆண்களின் மலட்டுத்தன்மைக்கு மிக முக்கிய காரணமாக இருப்பது விந்தணுக்கள் எண்ணிக்கை மற்றும் தரம் குறைதல். இதற்கு நம் வாழ்க்கைமுறை மற்றும் உணவுகள் தான் முக்கிய காரணம் என்கின்றனர் மருத்துவர்கள்.
குறிப்பாக பீட்சா, பர்கர், பிரைஸ், பிராசட்ஸ் இனிப்பு வகைகள் குளிர்பானங்கள், ஜங்க் புட் வகைகளை தொடர்ந்து சாப்பிடும் ஆண்களுக்கு விந்தணுக்கள் எண்ணிக்கை 25% வரை குறைந்தது ஆய்வில் உறுதியானது. இதற்கு தீர்வு பிரெஷ் காய்கறிகள், மீன், இறைச்சி உள்ளிட்டவை அடங்கிய ஆரோக்கிய உணவு முறையாகும்.