Categories
தேசிய செய்திகள்

நடுரோட்டில்… “மனைவியின் கள்ளக்காதலனுக்கு கத்திக்குத்து”… திக் திக் காட்சி..!!

ஆந்திரா மாநிலம், பிரகாசம் மாவட்டத்தில் கள்ளத்தொடர்பு காரணமாக நடுரோட்டில் இளைஞர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டம் ஓங்கோலை சேர்ந்த ஜோசப் என்பவரின் மனைவி தனியார் ஷாப்பிங் மாலில் பணிபுரிந்து வருகிறார். அதே ஷாப்பிங் மாலில் தனுஷ் என்பவரும் பணிபுரிந்து வருகிறார். இருவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்ட நிலையில் இதை அறிந்த ஜோசப் தொடர்பை முடித்துக் கொள்ள வேண்டும் என பலமுறை மனைவியிடம் தெரிவித்துள்ளார். இருப்பினும் அவரது மனைவி அதை கேட்கவில்லை.

இந்நிலையில் ஜோசப் தனது மனைவி மற்றும் கள்ளக்காதலனை அழைத்து பேச்சுவார்த்தை செய்யலாம் என அங்குள்ள பெட்ரோல் பங்க் அருகே வரவழைத்துள்ளார். ஜோசப் ஏற்கனவே திட்டமிட்டபடி மறைத்து வைத்திருந்த கத்தியை சம்பவ இடத்திற்கு கொண்டு வந்தார். தனுஷ் வந்தவுடன் ஜோசப் மறைத்து வைத்திருந்த கத்தியை வைத்து சரமாரியாக நடுரோட்டில் வெட்டியுள்ளார்.

அவ்வழியாக சென்ற வாகன ஓட்டி ஒருவர் தடுக்க முயன்றும் அதை தாண்டி ஜோசப் சரமாரியாக வெட்டினார். இதில் தனுஷ் அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். கொலை செய்த ஜோசப் நேரடியாக காவல் நிலையத்திற்கு சென்று சரணடைந்தார். இந்த சம்பவம் அங்குள்ள காந்தி பூங்காவில் வைக்கப்பட்ட சிசிடிவி கேமராவில் பதிவானது. இந்த காட்சிகளை ஆதாரமாகக்கொண்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்காதல் காரணமாக நடுரோட்டில் இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Categories

Tech |