Categories
தேனி மாவட்ட செய்திகள்

சுத்தியலால் அடித்து மனைவி கொலை…! காவல் ஆய்வாளரின் விபரீத முடிவு….!!

லஞ்ச புகார் வழக்கில் அண்மையில் 3 ஆண்டு சிறை தண்டனை பெற்று ஜாமீனில் வெளிவந்த லஞ்ச ஒழிப்புத்துறை முன்னாள் காவல் ஆய்வாளர் தனது மனைவியை கொன்று விட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் வடுகு பட்டியை சேர்ந்தவர்  பெருமாள் பாண்டியர். இவர் மதுரை மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 2019ஆம் ஆண்டு லஞ்சம் பெற்ற வழக்கில் அரசு மருத்துவரை விடுவிப்பதில் லஞ்சம் பெற்றதாக வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் இவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு இருந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு கடந்த மூன்று தினங்களுக்கு முன்பாக வந்தது. மதுரை மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை நீதிமன்றமானது இவருக்கு மூன்று ஆண்டுகள் தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தது. இதனை அடுத்ததாக இவர் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

விடுவிக்கப்பட்டதையடுத்து மதுரையின் நேரு தெருவில் உள்ள தனது வீட்டில்  மனைவி உமா மீனாட்சியுடன் நேற்று காலை இருந்தபோது  இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரது வீட்டில் இருந்து சுத்தியலால் மனைவி உமா மீனாட்சியை தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த உமா மீனாட்சி சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார்.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பெருமாள் பாண்டி உடனடியாக அவரும் கயிறால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். சம்பவ இடத்திற்கு செல்லூர் காவல் துறையினர், தடயவியல் நிபுணர்கள் நேரில் சென்று விசாரணை நடத்தினர். லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்டு தண்டனை வழங்கப்பட்ட நிலையில் அவர் மனைவியை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இந்தப்பகுதி இடையே மிகுந்த சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |