இந்தியா – பங்களாதேஷ் இடையே புதிய ரயில் திட்டத்தை பிரதமர் மோடி பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசினாவுடன் தொடங்கி வைத்தனர்.
பங்களாதேஷின் விடுதலை பொன்விழாவை ஓட்டி காணொளி மூலம் நடைபெற்ற மாநாட்டில் அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசினா – பிரதமர் மோடியும் கலந்து கொண்டனர். இருதரப்பு உறவுகள் குறிப்பாக கொரோனாவுக்கு பிந்தைய காலத்தில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது தொடர்பான அனைத்து அம்சங்கள் குறித்தும், இரு தலைவர்களும் விரிவாக விவாதித்தனர்.
பங்களாதேஷ் உடனான உறவை மேலும் வலுப்படுத்த இந்தியா முன்னுரிமை அளித்து வருவதாக மோடி தெரிவித்தார். இதனையடுத்து இரு பிரதமர்களும் இணைந்து மேற்குவங்கத்தின் ஹல்தி பாரி பங்களாதேஷின் சிலகாட்டி இடையே புதுப்பிக்கப்பட்ட ரயில் பாதையை பயன்பாட்டிற்கு தொடக்கி வைத்தனர். இந்த ரயில் பாதை 55 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இந்த பாதையில் சரக்கு ரயில் இயக்கப்பட உள்ளது. இது இரு நாடுகளை இணைக்கு 5ஆவது இணைப்பு பாதை என்பது குறிப்பிடத்தக்கது.