குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளதற்கு காரணம் கூறப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் கொரோனா பரவல் காரணமாக குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஊரடங்கு தளர்வுக்கு பின்னர் 15ஆம் தேதியிலிருந்து சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது. இதையயடுத்து ஐந்தருவி, புலியருவி மற்றும் பழைய குற்றாலம் ஆகிய அருவியில் குளிக்க நேரக்கட்டுப்பாட்டுடன் பயணிகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டது.
இந்நிலையில் மீண்டும் குற்றாலம் மெயினருவி மற்றும் பழைய குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்படடுள்ளது. இதற்கு காரணம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பெய்வதால் நீர்வரத்து அதிகரித்துள்ளது. எனவே அருவிகளில் குளிக்க மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தண்ணீரில் பெரிய பாராங்கற்கள் அடித்து கொண்டு வருவதால் முன்னெச்சரிக்கையாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.