தமிழகத்தில் ஜனவரி மாதம் பள்ளிகளை திறப்பதற்கான முன்னேற்பாடு பணிகள் தொடங்கி உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. பள்ளிகளை திறப்பதற்கு மாணவர்களின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தமிழக அரசு பள்ளிகள் திறப்பது பற்றி எந்த ஒரு அறிவிப்பையும் தற்போது வரை வெளியிடவில்லை. ஆனால் கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் திறக்கப்பட வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் தமிழகத்தில் ஜனவரியில் பள்ளிகளை திறக்க முன்னேற்பாடு பணிகள் தொடங்கியுள்ளது. அதன் முதற்கட்டமாக மாணவர்களை கையாள்வது குறித்தும், சுகாதாரத்தைப் பேணுவது குறித்தும் ஆசிரியர்களுக்கு பயிற்சி தொடங்கியுள்ளது. மேலும் தனியார் பள்ளிகளில் நடத்தப்படும் அரையாண்டு தேர்வில் வரும் மதிப்பெண்களை வைத்து, மாணவர்களின் தேர்ச்சி தொடர்பான முடிவுகளை எடுக்க கூடாது. தேர்வுக்காக தனியாக தேர்வு கட்டணம் வசூலிக்கக் கூடாது என பள்ளிக்கல்வித்துறை அதிரடியாக தெரிவித்துள்ளது.