Categories
தேசிய செய்திகள்

பழம் வாங்க சென்ற ஈபி ஆபிசர்…. கலாய்த்த பழ வியாபாரி…. செம கலாய்…!!

பழ வியாபாரி ஒருவர் பழம் வாங்க வந்த ஈபி அலுவலர் ஒருவரை செமையாக கலாய்த்துள்ளது சிரிப்பை ஏற்படுத்தியுள்ளது.

நபர் ஒருவர் எலக்ட்ரிசிட்டி போர்டு அலுவலகம் வெளியில் தள்ளுவண்டியில் வைத்து வாழைப்பழம் விற்றுக் கொண்டிருந்துள்ளார். அப்போது ஈபி அலுவலர் ஒருவர் வந்து வாழைப்பழம் என்ன விலை? என்று கேட்டுள்ளார். அதற்கு வியாபாரி சார் இத நீங்க எதுக்கு வாங்க போறீங்கன்னு தெரிஞ்சா தான் நான் விலை செல்ல முடியும் என்றுகூறியுள்ளார் . அதற்கு அந்த ஈபி அலுவலர் என்னப்பா நீ, நான் எதுக்கு வாங்கினால் உங்களுக்கு என்ன என்று கேட்டுள்ளார். அதற்கு வாழைப்பழ வியாபாரி இல்ல சார், நீங்க இந்த வாழைப்பழத்தை கோயிலுக்கு கொண்டுபோக வாங்கினால் ஒரு பழம் 10 ரூபாய்.

குழந்தைகளுக்கு வாங்கினால் ஒரு பழம் 20 ரூபாய். மேலும் தெரிஞ்சவங்களுக்கு வாங்கினால் ர1 பழம் 25 ரூபாய் என்றும் மற்றும் நீங்கள் சாப்பிட வாங்கினால் ஒரு பழம் 30 என்றும் கூறியுள்ளார். அதற்கு அந்த ஈபி அலுவலர் என்னது என்னயே ஏமாற்ற பாக்கறீங்களா? ஒரு பழம் எப்படி வேற வேற விலைக்கு வரும் என்று கேட்டுள்ளார். அதற்கு வியாபாரி “This is my tariff plan” என்று கூறி விட்டு நீங்க மட்டும் ஒரே கரண்ட், ஒரே டிரன்ஸ்மிஷன் சிஸ்டம் வைத்துக்கொண்டு  வீட்டுக்கு தனி, கடைக்கு தனி, பேக்டரிக்கு தனி விலைனு விக்குறீங்க. நாங்கள் கேட்டால் tariff என்று சொல்வீர்கள் என்று கூறியுள்ளார்.

Categories

Tech |