நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்ப் தேர்தலில் தோல்வி அடைந்துள்ளார்.
டிரம்ப்பை எதிர்த்து அதிபர் வேட்பாளராக களம் கண்ட ஜோ பைடன் அபாரமாக வெற்றி பெற்றார். அவர் அடுத்த ஆண்டு ஜனவரி 20ஆம் தேதி அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்க இருக்கிறார். ஆனால் அதிபர் டிரம்ப் ஜோ பைடன் வெற்றியை ஏற்க மறுத்து வருகிறார்.
இந்நிலையில் பதவியேற்பு விழா நடை பெற்றாலும் கூட வெள்ளை மாளிகையிலிருந்து நான் வெளியேறப் போவதில்லை என அவரது ஆலோசகரிடம் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகி விவாதப் பொருளாக மாறியுள்ளது.
இதுகுறித்து ஆலோசகர் கூறும்போது, டிரம்ப் கோபத்தில் உணர்ச்சிவசப்பட்டு பேசி வருகிறார். அவர் வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேறுவார் என்று தெரிவித்திருந்தார். ஆனால் இது குறித்தான எந்த ஒரு தகவலையும் வெள்ளை மாளிகை வெளியிடப்படவில்லை.