Categories
உலக செய்திகள்

திடீர் திடீரென்று முளைக்குது… என்ன நடக்குதுன்னு தெரியல..? ஏலியன்சோட வேலையா..?

இந்த உலகமே மர்மங்கள் நிறைந்தது தான். நீங்கள் நினைத்து பார்க்க முடியாத மர்மங்கள் இந்த உலகில் தினந்தோறும் நடந்துதான் வருகிறது. இதற்கு அறிவியலிலும் விளக்கம் இல்லை. இப்படியான மர்மங்கள் சமீபத்தில் பரபரப்பை கிளப்பி வருகிறது. இதை பற்றி இதில் பார்ப்போம்.

அமெரிக்காவின் யூடா மாகாணத்தில் கடந்த நவம்பர் 18ஆம் தேதி பாலைவனத்தின் பெரிய கொம்பு ஆண்டுகளைக் கணக்கிட என இரண்டு வனத்துறையினர் பாலைவன பகுதிக்கு சென்றனர். அங்கு அவர்கள் பார்த்து விஷயம்தான் திடுக்கிட வைத்தது. பாலைவனத்தின் நடுவே சுமார் 10 அடி உயரத்தில் உலோகத்தாலான முக்கோண வடிவிலான தூண் இருந்தது. ஆள் நடமாட்டமே இல்லாத, யாருமே வந்து செல்லாத அந்த பாலைவனத்தில் எப்படி திடீரென்று இந்த உலோகம் இருந்தது. இதை பார்த்த அந்த விமானிகள் அதற்கு அருகில் நெருக்கமாக சென்று அதை புகைப்படம் எடுத்தனர்.

 

இதனை இணையதளத்திலும் பதிவிட்ட ஆனால் அந்த உலோகம் எங்கு இருக்கின்றது என்ற தகவலை அவர்கள் கூற மறுத்துவிட்டனர். ஆனால் ரெட்டிட் இணைய தளத்தில் இந்த தூண் இருக்கும் இடம் குறித்து தகவல் கசிந்தது. 48 மணி நேரத்தில் 33 வயதான அமெரிக்க ராணுவத்தின் முன்னாள் அதிகாரி டேவிட் என்பவர் அந்த இடத்திற்கு சென்று அந்த புகைப்படத்தை எடுத்து அதை இணையதளத்தில் வெளியிட்டார். இதை பார்த்து மக்கள் தூண் இருக்கும் இடத்திற்குச் சென்று புகைப்படம் எடுத்து வர தொடங்கினர்.

இது நடந்த சில நாட்களில் அந்த தூண் காணாமல் போனது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவ்வளவு பெரிய உலகம் எப்படி காணாமல் போயிருக்கும் என்று பலரும் கேள்வி எழுப்பத் தொடங்கினர். இது ஏலியன்களின் வேலையாகத்தான் இருக்கும் என்று அனைவரும் பேச தொடங்கினார். இதற்கிடையில் கலிபோர்னியாவில் இந்த தூண் வந்தது. ஆனால் இப்போது வந்தது உலோகத்தால் ஆன தூண்கள் அல்ல கண்ணாடியால் ஆன தூண்.

இந்த தூண் சம்பவம் பற்றி தி ஃபேமஸ் ஆர்டிஸ்ட் என்பவர் இந்த தூணை நட்டு வைத்தது தாங்கள்தான் என்று பொறுப்பேற்றுக்கொண்டார். இதன் விலை 45 ஆயிரம் டாலர் எனவும் குறிப்பிட்டிருந்தார். சரி இது ஏலியனின் வேலை இல்லை இன்று எல்லோரும் ஒரு முடிவுக்கு வந்தனர். பின்னர் பிரிட்டனில் ஆப் வித் என்ற பகுதியில் அதற்கு கடற்கரையோரப் பகுதியில் மீண்டும் ஒரு தோன்றியது. ரோமானியா நாட்டிலும் தோன்றியது. இதையும் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட போது இதையும் யாரும் ஒப்புக் கொள்ள முன்வரவில்லை.

பின்னர் அந்த பகுதியிலிருந்த தூண்களை மீட்டெடுத்த குழுவினர் அதை ஆன்லைனில் விற்பனைக்கு அறிவித்தனர். மக்கள் அதனை போட்டி போட்டுக் கொண்டு வாங்க ஆரம்பித்தனர். இந்த விஷயத்தில் ஏலியன்கள் இருப்பதாக பலரும் கூறுகின்றனர். இது உண்மை சம்பவமா? இல்லை வதந்திகளா? என்பது காலப்போக்கில் தான் தெரியவரும்.

Categories

Tech |