Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

“தமிழகத்தை காக்கும் கர்மவீரரே”… முதல்வரை புகழ்த்துரைத்த மாணவி…!!!

அரியலூர் மாவட்டத்தில்  முதலமைச்சருக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் மருத்துவப் படிப்பில் இடம் கிடைத்த மாணவ மாணவிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொரோனா  தடுப்பு வளர்ச்சிப்பணிகள் குறித்து அரியலூர் மாவட்டத்தில் நேற்று ஆய்வு செய்தார். இதையடுத்து அவரை சந்தித்த அப்பகுதி  அரசு பள்ளி மாணவ, மாணவிகள் தங்களுக்கு 7.5 சதவீத அரசு உள் ஒதுக்கீட்டில் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்ததற்காக நன்றி தெரிவித்தனர். அதில் சா.ரதிவாணன்  என்ற மாணவன் நன்றி கடிதம் ஒன்றை முதலமைச்சருக்கு அளித்தார்.

அக்கடிதத்தில் என் தாயின் மருத்துவ கனவெல்லாம் கலையாது காத்திட்ட கருணை மரவோரே! 7.5 சதவீத இடஒதுக்கீடு தந்தைமை காத்தீர்… அரியலூரில் எமை அறிந்திடுவார் யாருமில்லை. அது அன்றொரு நாள்… அறியாத பலருக்கு அரியவராய் உள்ளோம் ஐயா!உங்களின் அரும்பெரும் செய்கையினால்!  இது இன்றைய நாள் …எமக்கெல்லாம் முகவரி தந்திட்ட, மாணவர்களின் நலன் விரும்பும் முதல்வரே! அழியாது உமது பெயர் என்றென்றும் எங்கள் மனமெனும் அவைகளிலே…

ஆனந்தக் கடலில் குளிக்க வைத்து, அழகு பார்த்து வாழும் கர்மவீரரே… நோய் என்னும் அரக்கன் துளி கூட நுழையாது, தமிழகத்தை காத்திட்ட யாம்முள்ளோம் மறவாதீர்… கனவை நினைவாக்கிய  தமிழக முதலமைச்சருக்கு தங்களது நன்றி எனும் மலர்களை உங்களது காலடியில் சமர்ப்பிக்கிறோம் என்று அம்மாணவன் நன்றி கடிதம் எழுதியுள்ளார்.

நீட் தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்காத சவுமியா என்ற மாணவி தனக்கு மருத்துவ படிப்பில் இடம் கிடைக்குமோ? கிடைக்காதோ? என்ற குழப்பத்தில் இருந்துள்ளார். ஆனால் தற்போது முதலமைச்சர் அறிவித்த, 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் படி மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவ கல்லூரியில் அம்மாணவிக்கு இடம் கிடைத்துள்ளது என்றும், ஆகையால் உங்களுக்கு கோடான கோடி நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் எனவும் சௌமியா தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து சௌமியா அரசுப் பள்ளி மாணவர்களுக்கு முன்மாதிரியாக இருந்து மருத்துவராகி ஏழை எளிய மக்களுக்கு சேவை செய்வேன் என்றும் கூறினார்.

Categories

Tech |