ஒரு முறை உபயோகித்து தூக்கி எறியக் கூடிய முக கவசத்தை எக்காரணத்தைக் கொண்டும் மீண்டும் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கான தடுப்பு மருந்து கண்டறியும் முயற்சியில் உலக நாடுகளில் உள்ள அனைத்து ஆராய்ச்சியாளர்களும் ஒரு நொடி கூட வீணடிக்காமல் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள். பல்வேறு நாடுகளில் கொரோனா தடுப்பூசி இறுதிக் கட்ட சோதனையை எட்டியுள்ளது. இருந்தாலும் சில நாடுகளில் கொரோனாவின் தாக்கம் இன்னும் அதிகமாகவே உள்ளது.
அதனால் மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை மக்களுக்கு அறிவுறுத்தி வருகிறது. அதில் முக்கியமான ஒன்று முக கவசம் அணிவது. அவ்வாறு அணியும் முக கவசத்தை எவ்வளவு காலம் பயன்படுத்தலாம் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். அதன்படி மூன்றடுக்கு சர்ஜிகல் முக கவசத்தை 6 மணி நேரம் வரை உபயோகிக்கக்கூடாது. மீண்டும் பயன்படுத்தக்கூடாது. இது தவிர என் 95 முக கவசத்தை ஐந்து நாட்கள் வரை சுத்தம் செய்து திரும்ப திரும்ப உபயோகிக்கலாம்.
மேலும் வீட்டில் தயாரிக்கப்படும் முக கவசங்களை 16 மணி நேரம் வரை உபயோகிக்கலாம். பின்பு நன்கு வெயிலில் காய வைக்க வேண்டும். ஒரு முறை உபயோகித்து தூக்கி எறியக் கூடிய முக கவசத்தை எக்காரணத்தைக் கொண்டும் மீண்டும் பயன்படுத்தக்கூடாது. மேலும் அது ஈரமான உடன் உடனே மாற்றி விட்டு வேறு ஒன்றை அணியவேண்டும். இத்தகைய முக கவசத்தை மூடி உள்ள குப்பைத் தொட்டியில் போட்டு பின் கைகளை சோப்புப் போட்டு நன்கு கழுவ வேண்டும். இவ்வாறு செய்யாமல் நீண்ட நாட்களுக்கு ஒரே முக கவசத்தை அணிவது ஆபத்தை விளைவிக்கும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.