Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

”பேக்கிங்” செய்யாமல் சமையல் எண்ணெய் விற்க தடை – ஐகோர்ட் கிளை உத்தரவு …!!

சமையலுக்கு பயன்படுத்தும் எண்ணெய் வகைகளை சில்லரை விற்பனையில் ”பேக்கிங்” செய்யாமல் விற்பனை செய்ய இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

மதுரை மேலூரை சேர்ந்த வழக்கறிஞர் அருள்நிதி என்பவர் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அவருடைய மனுவில் சமையல் எண்ணெய்யில் கலப்படம் செய்யப்படுகிறது. இது ஆய்வக பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த கலப்படத்தால் கல்லீரல் பாதிப்பு, புற்றுநோய் உள்பட பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன. சட்டப்படி எண்ணையை சில்லறையாக விற்பனை செய்யக்கூடாது. பேக்கிங் செய்து தான் விற்பனை செய்ய வேண்டும். ஆகவே இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி கிருபாகரன் – புகழேந்தி அமர்வு சமையலுக்கு பயன்படுத்தும் எண்ணெய் பேக்கிங் செய்யப் படாமல் சில்லறையாக விற்பனை செய்ய இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்தனர். மேலும் 2011ஆம் ஆண்டு சட்டத்தின்படி சமையல் எண்ணெய் எவ்வாறு இதுபோல சில்லறையாக விற்பனை செய்யப்படுகிறது ? எண்ணெயின் தரத்தை ஆய்வு செய்வதற்காக எத்தனை ஆய்வகங்கள் உள்ளன ? அவற்றில் அரசு ஆய்வகங்கள் எத்தனை ?

தனியார் ஆய்வகங்கள் எத்தனை என்பதை மாவட்ட வாரியாக விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளனர். அதேபோல மற்ற மாநிலங்களில் ஆய்வகங்கள் உள்ளனவா ? கடந்த ஐந்து ஆண்டுகளில் எவ்வளவு பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன ? விதிகளை மீறியதாக எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன ? அது தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது ? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இது தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜனவரி 18-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து இருக்கிறார்கள்.

Categories

Tech |