தமிழக முதல்வர் எடப்பாடி ஒரு ஜெராக்ஸ் என்று செந்தில் பாலாஜி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அரசியல் கட்சிகள் தங்களுடைய தீவிரப் பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகின்றன. திமுகவும் தன்னுடைய பங்கிற்கு பிரச்சாரம் செய்து வருகிறது. மேலும் ஆளும் கட்சியினரும், எதிர்க்கட்சியினரும் தங்களை ஒருவருக்கொருவர் மாற்றி மாற்றி கொண்டு விமர்சனம் செய்து வருகின்றனர். மேலும் பிரபல நடிகர்களான ரஜினி, கமல் மற்றும் பார்த்திபன் ஆகியோரும் அரசியலில் இறங்கியுள்ளனர்.
இதனால் வரும் சட்டமன்ற தேர்தல் எதிர்பார்ப்பாகவும், சுவாரசியமாகவும் இருக்கும் என்று கருதப்படுகிறது. இந்நிலையில் கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தொகுதியியில் ஸ்டாலின் குரல் பரப்புரைக் கூட்டத்தில் திமுக எம்எல்ஏ செந்தில்பாலாஜி கலந்துகொண்டுள்ளார். அப்போது பேசிய செந்தில் பாலாஜி, “தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் திமுக-காங்கிரஸ் கூட்டணியின் போதுதான் நீட்தேர்வு கொண்டு வந்ததாக தவறான தகவலைக் கூறுகிறார்.
மேலும் தமிழகத்திற்கு நீட் தேர்வு முழுவதும் வந்தது அதிமுக ஆட்சியில் தான் என்று கூறியுள்ளார். இந்த அரசாங்கத்தை எப்படி வழி நடத்த வேண்டும் என்று சொல்லித் தருவதே திமுக தலைவர் ஸ்டாலின் தான் என்றும், “எடப்பாடி ஒரு ஜெராக்ஸ் முதல்வர்” என்று விமர்சனம் செய்துள்ளார். மேலும் முதல்வர் பழனிசாமி வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாக பேசுவதால், அவர் நிச்சயமாக விவசாயியாக இருக்க முடியாது என்று செந்தில்பாலாஜி கடுமையான விமர்சனத்தை மக்கள் முன்பு வைத்துள்ளார்.