Categories
லைப் ஸ்டைல்

Alert: வாட்ஸ் அப்பில் இதை யாரும் கிளிக் செய்ய வேண்டாம்… எச்சரிக்கை…!!!

இனிமேல் வாட்ஸ் அப்பில் ஏதாவது லிங்க் வந்தால் அதை யாரும் கிளிக் செய்ய வேண்டாம் என்று கடுமையாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உலகில் உள்ள பெரும்பாலான மக்கள் செல்போன் பயன்படுத்துகிறார்கள். ஆனால் அதில் உள்ள நல்லது கெட்டது எது வென்று அவர்களுக்கு தெரிவதில்லை. சிலர் பணம் சம்பாதிக்கும் ஆசையில், வாட்ஸ்அப் மூலமாக ஏதாவது மெசேஜ் வந்தால் அதை உடனே கிளிக் செய்து பார்க்கிறார்கள். அவ்வாறு செய்வதால் சில ஆபத்துகள் உள்ளன.

அவ்வாறு சமீபகாலமாக வாட்ஸ் அப் மற்றும் டெலிகிராம் மூலமாக அட்டகாசமான வேலைவாய்ப்பு, கை நிறைய சம்பளம், இலவச உபகரணங்கள் என்று போலி செய்திகளுடன் லிங்க் வருகிறது. இலவச காசோலை, பரிசு மற்றும் சலுகை போன்றவற்றை வழங்குவதாக கூறும் எந்த லிங்கையும் மக்கள் கிளிக் செய்ய வேண்டாம். மேலும் லிங்கை கிளிக் செய்தால், ஏடிஎம் ரகசிய எண்கள், அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் நிதி விபரங்கள் திருடப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது

Categories

Tech |